16.8 C
New York
Sunday, September 27, 2026

பெண் பொலிசாருக்கு பாலியல் துன்புறுத்தல் –  1,900 பிராங் அபராதம்

Bern-Mittelland  பிராந்தியத்தில் ரயிலில் பயணிகளை அவமதித்த 24 வயதுடைய ஒருவர், பின்னர் பெண் பொலிசார் ஒருவரை தூற்றி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த செயலுக்காக அவருக்கு  1,900 பிராங் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரயிலில் பயணிகளிடம் தொடர்ந்து சத்தம் போட்டும் அவமதித்தும் வந்த அந்த நபரை பொலிசார் கைது செய்து Waisenhausplatz பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரது கைவிலங்கை அகற்றிய போது பெண் பொலிசாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் செயலில் ஈடுபட்டார்.

இதற்காகவே அவருக்கு 1,900 பிராங் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles