20.9 C
New York
Wednesday, August 12, 2026

வீட்டில் இருந்து அகற்றும் பொலிஸ் நடவடிக்கை- 7 பேர் கைது.

Kleinbasel பகுதியில் நேற்றுக்காலை வீடு ஒன்றில் இருந்து ஆட்களை அகற்றுவதற்கான பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாழடைந்த அந்த வீட்டில் 16 பேர் வசித்து வந்தனர். அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீட்டில் இருந்து ஆட்களை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக அந்தப் பகுதி வீதிகள் நேற்றுக்காலை முதல் இரண்டு மணிநேரம் மூடப்பட்டன.

பாழடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த வீட்டில் இருந்து ஆட்களை அகற்றும் நடவடிக்கை கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட போது, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

அங்கு அதிகளவில் போதைப்பொருள் பயன்பாட்டாளர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

எனினும் தற்பொது அந்த வீடு முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles