2022 ஆம் ஆண்டில் சுவிசில் உள்ள மக்களில், மூன்றில் ஒரு பகுதியினர் தூக்கப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று என்று சமஷ்டி புள்ளியியல் அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பகுதியினர் தூக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 26%மானோர் குறிப்பிடத்தக்களவிலும், 7% வீதமானோர் நோய் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகளவில்பாதிக்கப்படுகின்றனர் என்றும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 37% பெண்களும். 29% ஆண்களும் இருப்பதாகவும், வயதுக்கு ஏற்ப பிரச்சினைகளும் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயியல் மாறுபாடுகள் 25 ஆண்டுகளில் மிக அதிகமாக அதிகரித்துள்ளன.
1997 இல் 5% மாக இருந்தது, 2022 இல் 7% மாக அதிகரித்துள்ளது. 15-39 வயதுடையவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் பெண்களில், நோயியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 1997 இல் 3% ஆக இருந்து 2022 இல் 8% ஆக உயர்ந்துள்ளது.
தூக்கப் பிரச்சினை ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாகும். இது உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.