16.6 C
New York
Thursday, September 11, 2025

ரயில் நிறுத்தாமல் சென்றதால் விமானத்தை தவறவிட்ட பயணிகள்.

சூரிச் HB இல் இருந்து புறப்பட்ட IC5  ரயில், திட்டமிட்டபடி சூரிச் விமான நிலையத்தில் நிறுத்தப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலை 6 மணியளவில் ரயில் சூரிச் விமான நிலையத்தில் நிறுத்தப்படாமல் சென்றது.

அங்கு நிறுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டதால், விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகள் பதற்றமடைந்தனர்.

அந்த ரயில் Winterthur இலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அடுத்த பக்கத்திற்குச் சென்று IC81 ரயில் மூலம், விமான நிலையத்தை அடைந்தனர்.

அதனால் அரை மணிநேரத்துக்கு மேல் தாமதமாக சென்ற பயணிகள் சிலர் விமானங்களைத் தவற விட நேரிட்டது.

தொழில்நுட்பக் கோளாறினால் ஏற்பட்ட இந்த தவறுக்காக  SBB நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles