23.5 C
New York
Thursday, September 11, 2025

தூக்கத்தில் வாகனம் ஓட்டிய இருவரின் லைசன்ஸ் ரத்து.

Aargau கன்டோனில், நேற்றுக்காலை  இரண்டு விபத்துகள் இடம்பெற்றன.

சாரதிகள்  தூங்கியதால் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதனால், இருவரது சாரதி அனுமதிப்பத்திரங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

முதலாவது சம்பவத்தில் Hellikon –  Zuzgen AG இடையிலான  பிரதான வீதியின் வலது பக்கத்தில் காரை ஓட்டிச் சென்று தடுப்புச் சுவரில் மோதியதால்,  35 வயதுடைய சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டது.

அந்த சிறிய கார் கவிழ்ந்து நடுவீதியில் கிடந்த நிலையில், சாரதியான பெண் சுயமாகவே அதிலிருந்து வெளியேறினார்.

Rohrerstrasse  இல் இருந்து Buchs நோக்கிச் சென்ற கார் கொங்றீட் சுவரில் மோதி சேதமடைந்த இரண்டாவது சம்பவத்திலும் 25 வயது சாரதியின் அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சாரதிகளும் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles