26.5 C
New York
Thursday, September 11, 2025

சுவிஸ் விமான கட்டணங்கள் கணிசமாக அதிகரிப்பு.

சுவிஸ்  விமான சேவையில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசனங்களைப் பொறுத்து கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

தேர்ந்தெடுக்கப்படும் ஆசனங்களைப் பொறுத்து விலை அதிகரிப்பு மாறுபடும்.

 எகனமி வகுப்பில் நிலையான ஆசனம் இப்போது இடங்களைப் பொறுத்து 52 பிராங்குகள் வரை கட்டணம் இருக்கும்.

இது முன்னரை விட ஆறு பிராங்குகள் அதிகம்.

முதல் வரிசையிலோ அல்லது அவசரகால வெளியேற்றத்திலோ அதிக கால் இடைவெளி கொண்ட ஆசனங்களுக்கான கட்டணம், இப்போது 132 பிராங்குகள் வரை இருக்கும் நிலையில், மேலதிகமாக 5  பிராங்குகளைச் செலுத்த வேண்டும்.

பிரீமியம் எகனமி ஆசனங்களுக்கு 81 பிராங்குகள் வரை செலுத்தும் பயணிகள், 15 பிராங்குகள் அதிகம் செலுத்த வேண்டும்.

வணிக வகுப்பு பயணிகள் கூடுதல் இடவசதி கொண்ட ஆசனத்துக்கு 265 பிராங்குகள்,அறவிடப்பட்ட நிலையில் மேலதிகமாக 26 பிராங்குகள் அறவிடப்படும்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles