Zug அருகே Oberwil இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதலாவது தளத்தில் தீ பரவத் தொடங்கியது.
இதையடுத்து. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த 18 பேரை அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் அவர்கள் தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- Zueritoday