சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய பூசணிக்காய் விளைவிக்கப்பட்டுள்ளது. இதன் எடை, 727.5 கிலோகிராம் ஆகும்.
St Gallen கன்டோனில் Jona இல் கடந்த சனிக்கிழமை நடந்த சுவிஸ் பூசணிக்காய் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்த இராட்சத பூசணிக்காய், முதல் பரிசை வென்றுள்ளது.
இந்த பூசணி Squash வகையைச் சேர்ந்தது. பச்சை நிறம் கொண்டது. இந்த வகை பூசணிக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி இது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளரின் பூசணிக்காய்கள் ஒரு மாதத்திற்கு காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் வெட்டப்பட்டு விநியோகிக்கப்படும்.