-0.1 C
New York
Sunday, December 28, 2025

தாயை தந்தை கொலை செய்து விட்டதாக கதறிய குழந்தை.

Bülach இல்  நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Bülach இல் உள்ள Kasernenstrasse இல் பிற்பகல் 3 மணியளவில், பலத்த காயமடைந்த பெண் ஒருவரை அடுக்குமாடி கட்டடத்தின் நுழைவாயிலுக்கு வெளியே குடியிருப்பாளர்கள் கண்டனர்.

அவசர மருத்து உதவி வழங்கப்பட்ட போதிலும்,  அந்தப் பெண் இறந்துவிட்டார் என்று சூரிச் கன்டோன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் 29 வயதுடைய ஆப்கானியர் என்றும், சந்தேகத்திற்குரிய குற்றவாளி 47 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும் பொலிசார் கூறினர்.

சந்தேகிக்கப்படும் குற்றவாளி தலைமறைவாக உள்ளார்.  மோப்ப நாய்கள்  உதவியுடன் அவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடந்து வருகிறது.

உயிரிழந்த பெண் அருகே அவரது நான்கு வயதுக் குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும், தாயை தந்தை கொலை செய்து விட்ட அது கதறியதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles