17.5 C
New York
Wednesday, September 10, 2025

பற்றியெரிந்த கார் – ஒருவர் பலி.

Nyonஇல்  கார்  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  . மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

நேற்று மதியம் 1 மணியளவில், Nyonஇல் உள்ள Route de Genève இல் போக்குவரத்து விபத்து குறித்து Vaud பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில், கார்  எரிந்த நிலையில் இருந்ததை  பொலிசார் கண்டுபிடித்தனர்.

சாரதி மற்றும் பயணி காயமடைந்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான 25 வயதான சுவிசில்  வசிக்கும் நபர், ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,  அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்தார்.

இரண்டாவது நபரான  21 வயதான சுவிஸ் நாட்டவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை.

கார் எப்படி தீக்கிரையானது என்பதைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles