16.8 C
New York
Sunday, September 27, 2026

பாரிய புகை மூட்டம் – யன்னல்களை மூடுமாறு எச்சரித்த Alertswiss.

Kriensஇல் உள்ள ஒரு மாடியில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து. Alertswiss மாலையில் புகை பற்றி எச்சரித்ததுடன்,  ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடுமாறும் பரிந்துரைத்தது.

- Advertisement -

லூசெர்ன் கன்டோனல் பொலிசார், உதவிக்கு  அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர், ஆனால் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.

Schachenstrasse இல் தீ ஏற்பட்டதாக Alertswiss தெரிவித்துள்ளது.

வீடுகளின் ஜன்னல்களை மூடவும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும், இரவு 7 மணிக்குப் பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

பெரும் எண்ணிக்கையான தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் அந்த இடத்தில் காணப்பட்டனர்.

மூலம் -20min

Related Articles

Latest Articles