34.1 C
New York
Tuesday, June 24, 2025

Valiant  வங்கியில் கொள்ளையடித்த மர்மநபர்.

Sursee யில் உள்ள  Valiant  வங்கியில் நேற்று  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்  தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிசார் சாட்சிகளை  தேடி வருகின்றனர்.

நேற்றுக் காலை 9:30 மணியளவில் இந்த கொள்ளை நடந்துள்ளதாக Lucerne பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Sursee யில் உள்ள  Valiant  வங்கி கிளைக்குள் முகமூடி அணிந்து நுழைந்த ஒருவர்,  மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கொள்ளையிடப்பட்ட பணத்தின் சரியான தொகை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  குற்றவாளி சென் ஜோர்ஜ் பாடசாலை சதுக்கம் வழியாக தப்பி ஓடினார் என்றும், அவர் 175 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – zueritoday.

Related Articles

Latest Articles