5.3 C
New York
Tuesday, December 30, 2025

பெய்ரூட் தாக்குதலில் சுவிஸ் பிரஜை காயம்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சுவிஸ் நாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பெய்ரூட்டில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே அவர் காயம் அடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சுவிஸ் வெளியுறவு அமைச்சு இராஜதந்திரப் பாதுகாப்பின் ஒரு பகுதியாகக் கண்காணித்து வருகிறது.

தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

லெபனானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் தற்போது சுமார் 1,200 சுவிஸ் பிரஜைகள் பதிவு செய்துள்ளனர்.

அங்கிருந்து வெளியேறுமாறு சுவிஸ் அரசாங்கம் சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. எனினும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் எதையும் அறிவிக்கவில்லை.

அதேவேளை பிரான்ஸ் போர்க் கப்பல் ஒன்றையும், ஜெர்மனி இராணுவ விமானம் ஒன்றையும் தமது நாட்டவர்களை வெளியேற்றுவதற்கான அனுப்பியுள்ளது.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles