17.2 C
New York
Wednesday, September 10, 2025

வங்கிக் கொள்ளையர் பணத்துடன் சிக்கினார்.

Sursee யில் வங்கிக் கொள்ளை சந்தேக நபர், கைது செய்யப்பட்டுள்ளார் என, Lucerne சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கிக் கொள்ளை இடம்பெற்று சில மணிநேரங்களுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 Valiant  வங்கிக்குள் நேற்றுக் காலை புகுந்த மர்ம நபர் ஒருவர் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

30 வயதுடைய சுவிஸ் நாட்டவரான அவரை நேற்று மாலை பொலிசார் கொள்ளையடித்த பணத்துடன் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட காரணத்தை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles