குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்லாலோம் (slalom) போட்டியில் சுவிஸ் ஸ்கையர் லோயிக் மெய்லார்ட் தங்கப் பதக்கம் வென்றுள்ளார், அவுஸ்ரேலியாவின் ஃபேபியோ ஜிஸ்ட்ரெய்ன் மற்றும் நோர்வேயின் ஹென்ரிக் கிறிஸ்டோபர்சனை முந்தி அவர் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
1948 இல் சென் மோரிட்ஸில் எடி ரெய்னால்டரைத் தொடர்ந்து, ஸ்லாலோமில் ஒலிம்பிக் தங்கம் வென்ற இரண்டாவது சுவிஸ் ஸ்கையர் மெயிலார்ட் ஆவார்.
1980 இல் லேக் பிளாசிட்டில் ஜாக் லூதி வெண்கலப் பதக்கத்தையும், 2018 இல் பியோங்சாங்கில் ரமோன் ஜென்ஹவுசர்ன் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தனர்.
மூலம்- swissinfo

