14.6 C
New York
Sunday, September 27, 2026

அதிக திருட்டுகள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் சூரிச்.

ஐரோப்பாவில் அதிகளவில் திருட்டுகள் நடக்கின்ற சுற்றுலா நகரங்களின் பட்டியலில் சூரிச்சும் இடம்பெற்றுள்ளது.

திருட்டு அச்சுறுத்தல் அதிகம் உள்ள 25 நகரங்களை ஜெர்மன் நிறுவனம் ஒன்று பட்டியலிட்டுள்ளது.

- Advertisement -

அலைபேசி, இலத்திரனியல் கருவிகள், கார் திருட்டுகள், பிக்பொக்கட் போன்ற குற்றச்செயல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அதிக குற்றச்செயல்கள் இடம்பெறும் நகராக இத்தாலியின் மிலன் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து லண்டன், எடின்பரோ, ரோம், ஸ்டொக்ஹோம், நிசா, வெனேடிக், பார்சிலோனா, சூரிச் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

இந்த 25 நகரங்களின் பட்டியலில் சுவிசின் வேறெந்த நகரங்களும் இடம்பெறவில்லை.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles