-0.1 C
New York
Sunday, December 28, 2025

1.6 கிலோ கொகெய்னுடன் மூவர் கைது.

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்களை Zug பொலிசார், கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Baar நகராட்சியில் ரோந்து சென்ற பொலிசார், மெதுவாக பாதுகாப்பற்ற முறையில் காரை ஓட்டிச் சென்ற மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்தனர்.

37 வயதான கொசோவோ நாட்டவர், கோகெயின் மற்றும் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.

அந்தக் காரில் 30 வயதுடைய ருமேனிய பெண்ணும், 20 வயதுடைய ஸ்லோவேனிய பெண்ணும் இருந்தனர்.

அவர்களிடமிருந்து சுமார் 40 கிராம் கொகெய்ன் மற்றும் பெரும் தொகை பணம் ஆகியவற்றை பொலிசார் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில்,  1.6 கிலோகிராம் கொகெய்ன் போதைப்பொருள் மற்றும் பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles