26.7 C
New York
Wednesday, August 19, 2026

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சுவிஸ் மீண்டும் தெரிவு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுவிட்சர்லாந்துக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இதன்படி 2025 ஜனவரி முதல் 2027 டிசெம்பர் வரை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும்.

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், சுவிட்சர்லாந்து மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் நேற்று நடந்த ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், பேரவையின் புதிய உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள், ஐரோப்பிய பிராந்தியக் குழுவிற்கு ஒதுக்கப்பட்ட மூன்று இடங்களுக்குப் போட்டியிட்டிருந்தன.

இந்த நிலையில், வாக்களிக்கத் தகுதி பெற்ற  183 நாடுகளில் 175 நாடுகளின் ஆதரவை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles