0.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச் விமான நிலையத்தை பரபரப்புக்குள்ளாக்கிய விமானம்.

Edelweiss விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, தீயணைப்பு பிரிவினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக விமான நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது.

விமானத்தை தரையிறக்குவதற்கான கியர் சரியாக செயற்படாத நிலையில், அவசரமாக தீயணைப்பு வாகனங்கள் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து நேற்று மாலை 6 மணியளவில் விமானம் முன்னெச்சரிக்கையுடன் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

எந்தவித பாதிப்புகளும் இன்று விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், அரை மணிநேரத்திற்குப் பின்னர் விமான நிலையம் வழமைக்குத் திரும்பியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles