பெரும்பாலான சுவிஸ் மக்கள் அலைபேசி இல்லாமல் தூங்கச் செல்வதில்லை என furniture brand Ikea நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சுமார் 60% சுவிஸ் மக்களின் படுக்கை மேசைகளில் புத்தகத்துக்குப் பதிலாக அலைபேசி இடம்பெற்றுள்ளது.
இந்த வீதம் 18-39 வயதுடையவர்களிடையே 79% ஆக காணப்படுகிறது.
இத்தாலிய மொழி பேசுபவர்களில் பாதி பேர், பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் 46% மற்றும் ஜெர்மன் மொழி பேசுபவர்கள் 38% பேர் புத்தகங்களையே படுக்கையின் போது விரும்புகின்றனர்.
இத்தாலிய மொழி பேசும் டிசினோ மாகாணத்தில் வசிப்பவர்களில் கால் பகுதியினர் செல்லப்பிராணியுடன் உறங்குகின்றனர்.
இந்தப் பழக்கம் ஜெர்மன் மொழி பேசுபவர்களிடையே 9%மாக உள்ளது.
18 முதல் 75 வயதுக்குட்பட்ட 1,020 பேரிடம் ஓகஸ்ட் 19 முதல் 30ஆம் திகதி வரை, நடத்தப்பட்ட ஆய்வில், பத்தில் ஏழு பேர் நன்றாக தூங்க விரும்புகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
மூலம்- Swissinfo