Aargau கன்டோனின் Kaisten நகரசபை மேயர் அர்பாத் மேஜர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை Kaisten இல் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரம் ஒன்றில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
- Advertisement -

இறந்தவர் Kaisten நகர மேயரான அர்பத் மேஜர் என இனங்காணப்பட்டுள்ளது.
இதில் குற்றங்கள் இடம்பெற்றதாக பொலிசார் சந்தேகிக்கவில்லை.
ஆனால் இறப்புக்கான சூழ்நிலை குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min


