22.8 C
New York
Tuesday, September 9, 2025

வீடு தீப்பற்றி ஒருவர் பலி.

Malix இல் வீடு ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று அதிகாலை 2.15 மணியளவில் தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததாக Graubünden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு பிரிவினர் மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து 60 வயதுடைய ஒருவரை மீட்டு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்ற முயன்ற போதும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவாமல் தடுக்க வீட்டின் கூரையின் ஒரு பகுதியும் அகற்றப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த நாய் பல்கனியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் பிராங்குகள் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles