16 C
New York
Tuesday, September 9, 2025

சுக்குநூறாக சிதறிய BMW கார்- 21 வயது இளைஞன் பலி.

Bülach அருகேயுள்ள Winkel இல் இன்று அதிகாலை கார் ஒன்று மரத்துடன் மோதிய விபத்தில் 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

BMW கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதியுச்ச வேகத்தில் பயணம் செய்த கார் வீதியோரத்தில் இருந்து மரத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார் முற்றிலுமாக சிதைந்து போனதுடன், அதன் பாகங்கள் பல நூறு மீற்றர் தூரத்துக்கு அப்பால் சிதறிக் காணப்பட்டன.

இந்த விபத்தில் 21 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles