16.6 C
New York
Thursday, September 11, 2025

9 தற்காலிக புகலிட மையங்களை மூடுகிறது சுவிஸ்.

சுவிட்சர்லாந்தில் 1,735 தங்குமிடங்களுடன் கூடிய ஒன்பது தற்காலிக புகலிட மையங்களை வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மூடுவதற்கு குடியேற்றத்திற்கான அரச செயலகம்  தீர்மானித்துள்ளது.

இந்த வசதிகளை மூடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பிராங்குகளை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இது வருடத்திற்கு சுமார் 40 மில்லியன்  பிராங்குகளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலையுதிர்காலத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான புகலிடக் கோரிக்கையாளர்கள் வந்ததும், இந்த முடல்களுக்கு காரணமாகும்.

முந்தைய ஆண்டை விட ஓகஸ்ட் மாதத்தில்  23% குறைவான புகலிட விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டன. செப்ரெம்பரில் மேலும் 40% குறைந்துள்ளது.

Dübendorf  (Zurich)  , Eigenthal (canton Lucerne), Bremgarten (Aargau), Allschwil (Basel Country), Steckborn (Thurgau), Beringen (Schaffhausen) , Bure (Jura) and Plan-les-Ouates (Geneva)  ஆகிய இடங்களில் உள்ள புகலிட மையங்களே மூடப்படவுள்ளன.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles