Schaffhausen. நகரில் நேற்றுக்காலை கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வாகனம் முற்றாக எரிந்து போயுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நேற்று மதியம் Gennersbrunnerstrasseஇல் இருந்து Solenbergstrasse நோக்கி சென்றுகொண்டிருந்த போது, Herblingen ரயில் நிலைய சுற்றுவட்டத்தில் காரின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை சாரதி அவதானித்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த தரிப்பிடத்தில் அவர் காரை நிறுத்திய போது அது தீப்பிடித்து எரிந்துள்ளது.
மூலம் – Zueritoday