La Chaux-de-Fonds இல் அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 3 சடலங்கள் குறித்து Neuchâtel பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் என்றும், 38 வயதான கணவன், 42 வயதான மனைவி, 17 வயதான மகள் ஆகியோரே அவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -

பிரெஞ் மற்றும் தாய் குடியுரிமை கொண்டவர்களான இவர்கள்,நீண்டகாலமாக இங்கு வசித்துள்ளனர்.
தொழில்நுட்ப கண்டறிவுகளுக்கு அமைய மனைவியையும், மகளையும் சுட்டுக் கொன்று விட்டு கணவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார் என தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – 20min


