சில்லறை விற்பனையாளர் கூட்டுறவு மற்றும் தொழிற்சங்கங்கள் இடையிலான சம்பள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
Unia, Syna, OSC மற்றும் சுவிஸ் வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே, பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்கான இழப்பீடு, சுகாதார காப்புறுதி கட்டண இழப்பீடு மற்றும் உண்மையான ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை சில்லறை விற்பனையாளர் கூட்டுறவு ( Coop) நிராகரித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சம்பள பேச்சுவார்த்தையின் முடிவை சங்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் – Zueritoday

