Kappel இல் உள்ள Hägendorfstrasse 15 வயதுடைய மாணவன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், காயங்களுடன் ஒருவர் கிடப்பதாக Solothurn கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக பொலிசார் அங்கு சென்ற போது, 15 வயதுடைய சிறுவன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சம்பவ இடத்தில் காணப்பட்டார்.
முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 15 வயதுடைய சிறுவன் Hägendorf இல் கைது செய்யப்பட்டார் என Solothurn கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் கைதுக்கான காரணங்கள் குறித்த விபரங்களையும் தெரிவிக்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் ஒருவரையொருவர் அறிந்திருப்பதாகவும், ஒன்றாக பள்ளிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிறுவனால் முன்னதாகவே அச்சுறுத்தல்கள் இருந்ததாகவும் அதுபற்றி பொலிசாரிடம் முறையிட்ட போதும் அவர்கள் அதனை சரியாக கவனிக்காததால் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மூலம் -zueritoday.