Marsens FR அருகே A12 நெடுஞ்சாலையில் கார் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வியாழன் மாலை A12 இல் ஓடிக்கொண்டிருந்த 24 வயதுடைய இளைஞன், கார் மோதியதில் அந்த இடத்திலேயே மரணமானார் என Friborg கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
ஏன் அந்த இளைஞன் நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்தார் என எந்த தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- 20min

