2 C
New York
Monday, December 29, 2025

அடுத்தடுத்து வெடிக்கும் ஏடிஎம்கள் – இந்த வாரம் 3வது சம்பவம்.

Thurgau கன்டோனில் உள்ள Tobel இல் மற்றுமொரு ஏடிஎம் இயந்திரம் வெடிக்க வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வங்கி ஒன்றின் முகப்பு பகுதியில் இருந்த ஏடிஎம் இயந்திரம் வெடிக்க வைக்கப்பட்டிருப்பதை கண்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த ஏடிஎம். இயந்திரத்தில் இருந்து பணம் ஏதும் கொள்ளையடிக்கப்படவில்லை.

கிழக்கு சுவிட்சர்லாந்தில் ஒரே வாரத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் வெடிக்க வைக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

Wil அருகே Wilen இல் உள்ள Thurgauer Kantonalbank திங்கட்கிழமை இரவு முதலாவது சம்பவம் இடம்பெற்றது.

Tübach உள்ள Raiffeisen drive இல் இருந்த ஏடிஎம் இயந்திரம் மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஏடிஎம். இயந்திரங்களை சேதப்படுத்தியவர்களும் பணம் எதையும் கொள்ளையடிக்கவில்லை.

இதனால் ஒரே குழுவினரே இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles