Siebnen இல் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
Siebnenஇல் இருந்து Schwendenen நோக்கி 25 வயதுடைய பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு, 26 வயதுடைய ஓட்டுநர் காரைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
நேற்றுக்காலை 9.30 மணியளவில் காருக்குள் மணமும் புகையும் வரத் தொடங்கியதும் அவர்கள் காரை நிறுத்தி இறங்கிய போது கார் தீப்பற்றி எரிய தொடங்கியது.
தீயணைப்பு பிரிவினர் வந்து தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போதும் கார் முற்றாக நாசமாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறினார் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என Schwyz கன்டோன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் – Zueritoday

