சுவிட்சர்லாந்தின் Edelweiss Air நேற்று முதல் இலங்கைக்கு குளிர்கால விமான சேவையைத் தொடங்கியுள்ளது.
முதல் விமானம் நேற்றுக்காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கொழும்பில் இருந்து சூரிச்சிற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய நேரடி விமான சேவை, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் சுவிஸ் சர்வதேச விமான சேவை மூலம் பயணிகளுக்கு பல்வேறு விமானப் பயண வாய்ப்புகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

