7.4 C
New York
Wednesday, April 22, 2026

இருமல் மருந்து கடத்திய மருந்தாளருக்கு தடை.

மருந்தாளர் ஒருவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து பணியாற்ற  சூரிச் கன்டோனல் மருந்து கட்டுப்பாட்டு சபை, தடை விதித்துள்ளது.

கோடீன் அடங்கிய பதிவு செய்யப்படாத 1,844 போத்தல் இருமல் மருந்தை கடத்தியதன் மூலம் அவர் தனது கடமைகளை மீறியுள்ளார்.

குறித்த மருந்தகம் கடந்த பிப்ரவரி 2018 இல் ஒரு போத்தளை கொள்வனவு செய்திருந்தாலும், 2022 பிப்ரவரி மற்றும் ஜூன்  மாதங்களுக்கு இடையில் ஆறு கொள்வனவுகளில், மொத்தம் 1,844 போத்தல் இருமல் மருந்தை பெற்றுள்ளது.

போதைப்பொருள் சட்டத்திற்கு உட்பட்ட இந்தத் தயாரிப்புகள், மருந்தகத்தின் இருப்பு  முகாமைத்துவ அமைப்பில் அல்லது அதற்கு வெளியே பதிவு செய்யப்படவில்லை. விலைப்பட்டியல்களும் இருக்கவில்லை.

மூலம் – zueritoday.

Related Articles

Latest Articles