15.8 C
New York
Thursday, September 11, 2025

பழைய குழந்தைகள் மருத்துவமனையை தற்காலிகமாக புகலிட விடுதியாக மாற்ற யோசனை.

Hottingen மாவட்டத்தில்  தற்போது வெற்றிடமாக உள்ள பழைய குழந்தைகள் மருத்துவமனையை, தற்காலிகமாக புகலிட விடுதியாக பயன்படுத்த முடியுமா என்று சூரிச் அரச  கவுன்சில் ஆராய  வேண்டும் என, SVP கன்டோனல் கவுன்சிலர்கள் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

குழந்தைகள் மருத்துவமனை சூரிச்-லெங்கிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 150 ஆண்டுகளாக இயங்கிய மருத்துவமனைக் கட்டடம் தற்போது வெறுமையாக உள்ளது.

இதனை  புகலிட விடுதியாக மாற்றுவதன் மூலம்,  புகலிடக் கோரிக்கையாளர்களை கையாளும் சுமையில் இருந்து வரும் சூரிச் மாகாணத்தில் உள்ள நகராட்சிகள், அதிலிருந்து விடுவிப்பதற்கான  வாய்ப்பை உருவாக்கும் என  SVP கன்டோனல் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய புகலிட தங்குமிடங்களை உருவாக்குவது பெரும் நிதி சவால்களை வழங்குவது மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையைத் தடுக்கிறது என்றும் அந்த முன்மொழிவு கூறுகிறது.

எனவே அடுத்த 24 முதல் 26 மாதங்களுக்கு பழைய குழந்தைகள் மருத்துவமனையை,  தற்காலிகமாக புகலிட விடுதியாக பயன்படுத்துவதன் மூலம்  நகரசபைகளுக்கு ஆறுதல்  கிடைக்குமா என்பதை அரசு ஆராய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles