16.6 C
New York
Thursday, September 11, 2025

கிரில் அடுப்பு வெடித்து 4 பேர் படுகாயம்.

சூரிச் கன்டோனில் Kloten இல் உள்ள Schluefweg ஐஸ் ரிங்கில் உள்ள சிற்றுண்டியகத்தில், ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

நேற்று இரவு 9:30 மணிக்குப் பின்னர்,  சிற்றுண்டியகத்தின்  கிரில்லில் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால். திடீர் தீ மற்றும் வெடிப்பு ஏற்பட்டது.

இதில், 76 வயது முதியவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

9 மற்றும் 61 வயதுடைய இரண்டு பெண்களும், 77 வயதுடைய ஒரு ஆணும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிற்றுண்டியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களே காயமடைந்தனர் என்றும், அவர்கள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து, சூரிச் கன்டோனல் பொலிஸ் மற்றும், தீயணைப்பு புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles