21.5 C
New York
Wednesday, May 13, 2026

புகலிட மையத்தில் பரவும் அம்மை – 45 பேரை தனிமைப்படுத்த உத்தரவு.

Laufenburg  இல் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அவசரகால தங்குமிடத்தில் தட்டம்மை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் இதுவரை, இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அவர்களில் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட  சோதனையில் நேர்மறையான முடிவு வந்துள்ளது.

மேலும் இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, Aargau கன்டோனல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொற்றைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு கன்டோனல் மருத்துவர் கிளாடின் மாத்தியூ தியோபாட்,  உத்தரவிட்டுள்ளார்.

அவசரகால காப்பகத்தில் வசிப்பவர்களில் 45 பேர் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles