16.5 C
New York
Wednesday, September 10, 2025

யாழில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு தண்ணீர் கொடுக்க சாதி என்ன என கேட்ட பெண்!

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு தண்ணீர் கொடுக்க கேட்டபோது, சாதி என்ன என கேட்டு மற்ருமொரு பெண் இரக்கமின்றி தண்ணீர் கொடுக்க மறுத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இளைஞர் ஒருவர் கூறியுள்ள விடயங்கள் சாதி வெறியர்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது. யாழ் கே.கே எஸ் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்து இடம்பெற்ற பகுதியில் கடைகள் இல்லாததால் அருகில் இருந்த வீட்டில் போய் அங்கிருந்த இளைஞர் தண்ணீர் கேட்டபோது , வீட்டுக்கார பெண் என்ன சாதி என கேட்டு இழிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் கேட்கின்ற கேள்விகள் பலருக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது. வெளிநாட்டு மாப்பிளை என்றால் இப்படியா செய்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Latest Articles