23 C
New York
Monday, September 8, 2025

சுவிஸ் ரவைகளை உக்ரேனுக்கு அனுப்பிய போலந்து நிறுவனத்துக்கு தடை

சுவிட்சர்லாந்தில் இருந்து வாங்கப்பட்ட சினைப்பர் துப்பாக்கிகளுக்கான ரவைகளை, போலந்து நிறுவனம் ஒன்று, உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.

சுவிஸ் நிறுவனம் ஒன்றிடம் இருந்து 0.338 மற்றும் 0.308 ரகங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 45 ஆயிரம், சினைப்பர் துப்பாக்கி ரவைகள் போலந்து நிறுவனத்தினால் வாங்கப்பட்டு, உக்ரேனுக்கு அனுப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தச் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து போலந்து நிறுவனத்தை சுவிஸ் அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

சுவிஸ் சட்டப்படி, போரிடும் நாடுகளுக்கு சுவிசில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பரிமாற்றம் செய்ய முடியாது.

மூலம் -20min

Related Articles

Latest Articles