19.5 C
New York
Tuesday, September 9, 2025

கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி.

Vaud கன்டோனில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றுக்காலை Romanel-sur-Morges பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Bussigny நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்,  எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 19 வயது இளைஞன் உயிரிழந்தார்.

கார்களை ஓட்டி வந்த 27 வயதுடைய பிரெஞ்சுக்கார ரும், 38 வயதுடைய  சுவிஸ் பெண்ணும் காயம் அடைந்துள்ளனர்.

மூலம் -20min

Related Articles

Latest Articles