SBB S-Bahn ரயிலுக்கு நேற்று மாலை குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, Laufen BL ரயில் நிலையத்தில் ஏராளமான பொலிசாரும் தீயணைப்பு படையினரும் நிறுத்தப்பட்டு, குறித்த ரயிலில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
- Advertisement -

அத்துடன், இரு திசைகளிலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பல மணிநேர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர், அது வெறும் புரளி என பொலிசார் முடிவுக்கு வந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாசல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


