Schwyz கன்டோனல் பொலிசார் நேற்று பிற்பகல் மேற்கொண்ட, நடவடிக்கையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Unterschönenbuch இல் உள்ள CKW plant ஐ சிவில் உடை அணிந்த பொலிசார் திடீரென தடை செய்து நேற்று மாலை 5 மணியளவில் தேடுதல் நடத்தினர்.
இந்த தேடுதலில் பெருமளவு பொலிசார், ஈடுபட்டதோடு பொலிஸ் வாகனங்கள், அம்புலன்ஸ் என்பனவும் அங்கு பெருமளவில் காணப்பட்டன.
இதையடுத்து இரண்டு பேரைக் கைது செய்திருப்பதாகவும், கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அவர்கள் வழங்கவில்லை.
மூலம் – 20min