5.3 C
New York
Tuesday, December 30, 2025

கெபாப் விஷமானதால் 6 பேர் பாதிப்பு – பெண்ணுக்கு 5200 பிராங் அபராதம்.

St. Gallen கன்டோனில் உணவகம் ஒன்றில் கெபாப் உணவைச் சாப்பிட்ட ஐந்து குழந்தைகள் உட்பட 6 பேர் நோய்வாய்ப்பட்டனர்.

உணவு விஷமானதால், அவர்கள் நோய்வாய்ப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குறித்த உணவகத்தை 2022 ஆம் ஆண்டு தொடக்கம் கணவன் மனைவியே நடத்தி வந்தனர்.

உணவு விஷமான சம்பவத்தை அடுத்து உணவக உரிமையாளரான மனைவிக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

உணவை சுகாதாரமாக கையாளாத பெண்ணுக்கு 5200 பிராங் அபாரதம் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்த 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles