Biel நகரின் புதிய மேயராக சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த Glenda Gonzalez Bassi நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பின்னர் நகராட்சி அதிகாரிகள் இதை அறிவித்தனர்.
பீல் நகர அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவராவார்.
இந்த தேர்தலில் Glenda Gonzalez Bassi 208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த Bass 5848 வாக்குகளையும், அவரது போட்டியாளரான பிரெஞ்சு மொழி பேசும் லிபரல் உறுப்பினர் Natasha Pittet5640 வாக்குகளையும் பெற்றனர். 38.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.