பேர்ன் நகர சபைத் தலைவர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில், எவரும் போதிய வாக்குகளை பெற்றுக் கொள்ளாததால், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.
GFL வேட்பாளரான Alec von Graffenried ஐ விட, SP இன் வேட்பாளர் Marieke Kruit அதிக வாக்குகளைப் பெற்றார்.
ஆறு மாவட்டங்களிலும் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது.
எனினும், எவரும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால், 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் போட்டியிடலாம். அவர்கள் ஏற்கனவே முதல் சுற்றில் மேயர் பதவிக்கு போட்டியிட்டிருந்தாலும் இரண்டாவது சுற்றில் போட்டியிட முடியும்.
Marieke Kruit (SP): 19,912 votes (46.5%)
Alec von Graffenried (GFL): 11,284 votes (26.4%)
Melanie Mettler (GLP): 7595 votes (17.8%)
Janosch Weyermann (SVP): 3997 votes (9.3%)
பெர்ன் நகரில், 2025 முதல் 2028 வரையிலான சட்டமன்ற காலத்திற்கு அரசாங்கமும் நாடாளுமன்றமும் தேர்ந்தெடுக்கப்படும்.
நகர சபைக்கு 19 பட்டியல்களில் மொத்தம் 535 பேர் போட்டியிடுகின்றனர்.
மாநகர சபைத் தேர்தலுக்கு 6 பெண் வேட்பாளர்கள் மற்றும் மூன்று ஆண் வேட்பாளர்களைக் கொண்ட இரண்டு பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய மேயர் அலெக் வான் கிராஃபென்ரிட் உட்பட நான்கு பேர் நகர தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
அதேவேளை நகரசபையின் 2025 வரவுசெலவுத் திட்டத்துக்கு 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கு 29,461 பேர் ஆம் என வாக்களித்தனர். 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மூலம் -watson.ch