St. Gallen கன்டோனில் உள்ள Niederhelfenschwil இல் நேற்று மாலை, ஒரு வாகனத் தரிப்பிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
வீடு ஒன்றின் கார் தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீ, விரைவாகப் பரவியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -

அதனை அணைக்க சுமார் ஒரு மணிநேரம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
மூலம்- 20min


