சுவிஸ்- ஜேர்மனி எல்லையில் ஒரு திருமண ஊர்வலத்திற்குப் பயன்படுத்தப்பட்ட றோல்ஸ்- றோய்ஸ் கார்களின் அணிவகுப்பினால் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஜெர்மனியின் ஏ-5 நெடுஞ்சாலையில், சுவிஸ் இலக்கத் தகடு பொருத்தப்பட்ட 13 றோல்ஸ்- றோய்ஸ் கார்கள் இந்த திருமண ஊர்வலத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பல கிலோ மீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் முடங்கிப் போய் நின்றன.
இதையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், சுவிஸ்- ஜேர்மனி எல்லையில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள், சுவிஸ் இலக்கத் தகடு பொருத்தப்பட்ட றோல்ஸ்- றோய்ஸ் கார்களை திருமணத்திற்கான வாடகைக்கு பெற்றிருந்தனர் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin.