3 C
New York
Monday, December 29, 2025

ஜனவரி 31 வரை டெல் அவிவ் இற்கான  விமானங்கள் ரத்து.

சுவிஸ் எயர்லைன்ஸ் (SWISS) ஜனவரி 31ம் திகதி வரை டெல் அவிவ் இற்கான  விமானங்களை ரத்து செய்துள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் எயர்லைன்சை உள்ளடக்கிய லுப்தான்சா குழுமம்  அறிவித்துள்ளது.

முன்னதாக டெல் அவிவ்விற்கான  விமான சேவைகளை டிசெம்பர் 31ஆம் திகதி வரை இடைநிறுத்திய இந்தக் குழுமம், தற்போது மேலும் ஒரு மாதம் சேவை இடைநிறுத்தத்தை நீடித்துள்ளது.

இந்த நடைமுறை லுப்தான்சா குழுமத்தின்,  Austrian, Brussels மற்றும் Eurowings விமான சேவைகளுக்கும் பொருந்தும்.

அதேவேளை, பெய்ரூட்டிற்கான சேவைகள், பெப்ரவரி 28ஆம் திகதி வரையும், தெஹ்ரானுக்கான சேவைகள் ஜனவரி 31ஆம் திகதி வரையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் லுப்தான்சா அறிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles