18.2 C
New York
Thursday, September 11, 2025

சுவிசில் கோப்பி விலை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு.

சுவிசில் கோப்பியின் விலை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உயர்ந்துள்ளதாக, CafetierSuisse சங்கம்  தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு, சுவிஸ் உணவகங்களில்,  ஒரு கோப்பை கோப்பிக்கு, வாடிக்கையாளர்கள்,  கடந்த ஆண்டை விட சராசரியாக 0.09  பிராங்  அதிகமாகச் செலுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் சராசரியாக ஒரு கோப்பை கோப்பிக்கு 4.58  பிராங் செலவிட வேண்டியுள்ளது.

சில பிராந்தியங்களில், ஒரு சாதாரண கோப்பிக்கு 6 பிராங் வரை செலுத்த வேண்டியிருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் கோப்பியின் விலை, 0.36 பிராங்கினால் உயர்ந்துள்ளது.

வருடாந்திர CafetierSuisse கணக்கெடுப்பின்படி, ஆர்காவ் கன்டோனில்,  மலிவான கோப்பி கிடைக்கிறது.  அங்கு கோப்பியின் குறைந்த விலை 2.50 பிராங் ஆகும்.

இருப்பினும், அங்கு செலுத்தப்படும் சராசரி விலை 4.50  பிராங் ஆகும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles