Interlaken இல் உள்ள Höhematte Park இல் சமையலறையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
நேற்று நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

காயம் அடைந்தவர்களில் ஒருவர் அம்புலன்ஸ் மூலமும், இன்னொருவர் ஹெலிகொப்டர் மூலமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் சமையல் கூடத்தில் எவ்வாறு அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்ற விபரங்களை பொலிசார் வழங்கவில்லை.
மூலம்- 20min


