18.2 C
New York
Thursday, September 11, 2025

காரினால் மோதி உடைத்து நகைக்கடையில் கொள்ளை.

Winterthur  இல் உள்ள நகைக் கடையில் புகுந்த மர்ம நபர்கள் கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருடப்பட்ட காரை நுழைவு வாயிலின் மீது  மோதி உடைத்து விட்டு இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

கொள்ளையிடப்பட்ட நகைகளின் மதிப்பு இன்னும் தெரியவில்லை.

குறைந்தது இரண்டு பேர், இந்த கொள்ளையில் ஈடுபட்டனர் என்றும்,  திருடப்பட்ட காரில் தப்பி ஓடிவிட்டனர் என்றும், அவர்களை சூரிச் கன்டோனல்  பொலிசார் மற்றும் வின்டர்தூர் நகர பொலிசார்  தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -watson.ch

Related Articles

Latest Articles